இந்த ஆன்மீக பதிவில் (பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா) – பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா – முருகன் பாடல் / ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Pachai Mayil Vaahanane Shiva Balasubramanyane Vaa – Murugan Songs / Ayyappan Bhajan song Tamil Lyrics
============
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
—- பச்சை
கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
—- பச்சை
நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
—- பச்சை
வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
—- பச்சை
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே —- பச்சை
அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
—- பச்சை
(pachai mayil vaahanane shiva balasubramanyane) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள், Pillayar bhajan, Ayyappan Bajanai Paadal, ஐயப்பன் பஜனை பாடல், முருகன் பாடல் வரிகள், Murugan songs. You can also save this post பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா or bookmark it. Share it with your friends…