இந்த ஆன்மீக பதிவில் (சொற்றுணை வேதியன் பிரதோஷ பாடல் வரிகள் (நமச்சிவாயப்பதிகம்)) – Sotrunai Vedhiyan Pradosham Sivan Song Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொற்றுணை வேதியன் பிரதோஷ பாடல் வரிகள் (நமச்சிவாயப்பதிகம்) ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
சொற்றுணை வேதியன் சோதி வானவன் (நமச்சிவாயப்பதிகம்) பிரதோஷ பூஜை பாடல் வரிகள் – Sotrunai Vedhiyan Sothi Vaanavan Pradosham Sivan Song Tamil Lyrics – Sotrunai Vedhiyan song lyrics with meaning
============
சொற்றுணை வேதியன் – திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறை நமச்சிவாயப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே
—————- திருச்சிற்றம்பலம் ————-
============
பாடல் விளக்கம்
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொழிப்புரை:
வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.
குறிப்புரை:
சொல் துணை வேதியன் – சொல்லளவான வேத முதல்வன். வேதம் ( வாசகம் ) சொல்வடிவாகத்தான் அச்சொல்லின் ( வாச்சியப் ) பொருள் வடிவானவன் என்க. சோதி – பரஞ்சோதி. வானவன் – அழியாத வீட்டுலகினன். பொன் துணை திருந்து அடி – பொன்னடி, துணையடி, திருந்தடி எனப் பொலிவும் இணையும் செம்மையும் கொள்க. அடி பொருந்தக் கைதொழலாவது உள்ளத்தை அடியும் அடியை உள்ளமும் பற்றக் கொண்டு, கை குவித்து வணங்குதல். கையொன்று செய்யக் கருத்தொன்று எண்ணலாகாது. கல்துணைப் பூட்டி – கல்லைத் துணையாகப் பூணச்செய்து. கல்லொடு கட்டி என்றபடி. கடலிற் பாய்ச்சினும் கை அடிதொழ நற்றுணையாவது திருவைந்தெழுத்து. கடலிற் பாய்ச்சிய மெய்ம்மை, ` கல்லினோ டெனைப் பூட்டி அமண்கையர், ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால், நெல்லு நீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே ` என்றுள்ள வாய்மையால் உண்மையாதல் உணர்க. இருவினையாகிய பாசத்தால், மூன்று மலமாகிய கல்லொடு கட்டியிருத்தலின், மாறி மாறி வருகின்ற பிறவிப் பெருங்கடலில் வீழ்கின்ற அறிவிலுயிர்களும் பேரின்பக் கரை ஏறிட அருளும் அத்தகைய பேராற்றல் உடைய திருவைந்தெழுத்து, உணர்வுருவான நாவுக்கரசரை மிகச் சிறிய இவ்வுவர்க் கடலில் ஒரு கல்லின்மேல் ஏந்திக் கரையேற்றிடலை உரைத்தல் வேண்டுமோ ? ` இருவினைப் பாசம் மும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய்யஞ்செழுத்து அரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ ` ( தி.12 பெரியபுராணம். 1394). திருவைந்தெழுத்து இருவினைக் கயிற்றால் மலங்களாகிய மூன்று கல்லொடு கட்டி வீழ்த்தப் பெற்ற அஞ்ஞானியரைப் பவசாகரத்தினின்று முத்திக் கரையிலேற்றும் ஆற்றல் வாய்ந்தது. அப் பிறவிப் பெருங்கடலிலே மூன்று கல்மேல் ஏறிய அஞ்ஞானத்தரையும் முத்திக் கரை ஏற்ற வல்ல மெய்யெழுத்து, மெய்ஞ்ஞானத்தரசை இச்சிறு கடலிலே ஒரு கல்லின் மேல் ஏற்றி யிடலைச் சொல்லாதே அறியலாம். ஒரு கல் முக்கல் என்னும் நயம் அறியாமல், ` இருவினைப் பாசமும் ` எனப் பிரித்துப் பொருந்தா உரை யெழுதியிருத்தல் சேக்கிழார் திருவுள்ளத்துக்கு ஏலாது. ` நற்றுணை ` என்பதற்கு ` நற்றாள் ` என்றதற்குப் பரிமேலழகர் உரைத்ததுரைத்துக் கொள்க. ( தி.7 ப.35 பா.8.) ( பேரூர்ப். நிருத்தப்படலம் – 74).
(sotrunai vedhiyan sothi vaanavan) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song. You can also save this post சொற்றுணை வேதியன் பிரதோஷ பாடல் வரிகள் (நமச்சிவாயப்பதிகம்) or bookmark it. Share it with your friends…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…