*******************************************
திரைப்பட நட்சத்திரம் : Vijay Sethupathi
திரைப்படம் : Viduthalai Part 2
இசையமைப்பாளர் : Ilayaraja
பாடலாசிரியர் : Ilayaraja and Ananya Bhat
எழுத்தாளர் : Ilayaraja
வருடம் : 2024
*********************************************
தினம் தினமும் உன் நெனப்பு
ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
கனம் கனமும் என இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
ஆண் : வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
ஆண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
தினம் தினமும் ….ம்ம்ம்..
ஆண் : முதன் முதலா பார்வை பட்ட நேர்த்திலே
இதம் இதமா என்ன குயிலு கூவியதே
பெண் : கவனமில்லே ஏதோ என்ன திருத்தியதே
எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சே
ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே
அந்த சுழல விட்டு வெளிய வரவில்லையே
ஆண் : என் பாட்டதான் அடி நீ பாடுற
என் வார்த்த எனக்காக்குற
பெண் : ஒட்டிகிட்டு சிட்டு ரெண்டு
ஒண்ண சுத்தி ஒண்ணு வர
முத்து மழை வானம் கொட்டும் இதமாக
பெண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
தினம் தினமும் உன் நெனப்பு
பெண் : காத்திருப்பேன் நீ நடக்கும்
வழி பாத்து
காத் அசஞ்சா குதிக்கும்
மனம் அடங்காது
ஆண் : வாசலிலே கோலம் மேல பூ போல
ஒண்ண பார்த்தா தவிப்பு அடங்கும் படுத்தாது
நான் தனிச்சிருக்கேன் உள்ளம் தவிச்சிருக்கேன்
உன் குளிர் முகத்தால் அத தடுத்திருக்கேன்
பெண் : நமக்காக தான் பூமி
உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா
ஆண் : நட்சத்திரம் கண்சிமிட்ட
கிட்ட வந்து கட்டி கொண்டு
தோளில் தலை சாய்க்க வேண்டும் இதமாக
பெண் : தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்னைத் தொலைக்கிறதே
கனம் கனமும் என இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
ஆண் : வெளியே வரவும் வழியில்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை
ஆண் : தினம் தினமும் உம்ம்ம் ….
“Monica Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…
“Chikitu Song” Song Lyrics is from the movie “Coolie” which will be released in the…
"Chikitu Song" Song Lyrics is from the movie "Coolie" which will be released in the…
The lyrics for "Jinguchaa" were penned by Kamal Haasan, who revealed that he wrote them…
Kuberaa | Dhanush, Nagarjuna, Rashmika | DSP | Sekhar Kammula
Jinguchaa Song Lyrics is from the movie Thug Life which will be released in the…