இந்த ஆன்மீக பதிவில் (108 murugan potri – 108 முருகன் போற்றி (வ‌ 01)) – 108 Murugan Potri Tamil Version 01 பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… 108 murugan potri – 108 முருகன் போற்றி (வ‌ 01) ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

தமிழ் கடவுளாகிய‌ கந்தன், வடிவேலன், சக்திவேலன் எனப் போற்றப்படும் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை பாடி சிவன் மகனாகிய‌ முருகனின் அருளைப் பெறுங்கள்.

1. ஓம் ஆறுமுகனே போற்றி

2. ஓம் ஆண்டியே போற்றி

3. ஓம் அரன்மகனே போற்றி

4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

5. ஓம் அழகா போற்றி

6. ஓம் அபயா போற்றி

7. ஓம் ஆதிமூலமே போற்றி

8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி

9. ஓம் இறைவனே போற்றி

10. ஓம் இளையவனே போற்றி

11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி

12. ஓம் இடர் களைவோனே போற்றி

13. ஓம் ஈசன் மைந்தா போற்றி

14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி

15. ஓம் உமையவள் மகனே போற்றி

16. ஓம் உலக நாயகனே போற்றி

17. ஓம் ஐயனே போற்றி

18. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி

20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி

21. ஓம் ஒங்காரனே போற்றி

22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி

23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி

24. ஓம் கருணாகரரே போற்றி

25. ஓம் கதிர்வேலவனே போற்றி

26. ஓம் கந்தனே போற்றி

27. ஓம் கடம்பனே போற்றி

28. ஓம் கவசப்பிரியனே போற்றி

29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

30. ஓம் கிரிராஜனே போற்றி

31. ஓம் கிருபாநிதியே போற்றி

32. ஓம் குகனே போற்றி

33. ஓம் குமரனே போற்றி

34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

35. ஓம் குறத்தி நாதனே போற்றி

36. ஓம் குணக்கடலே போற்றி

37. ஓம் குருபரனே போற்றி

38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி

40. ஓம் சரவணபவனே போற்றி

41. ஓம் சரணாகதியே போற்றி

42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி

43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

44. ஓம் சிக்கல்பதியே போற்றி

45. ஓம் சிங்காரனே போற்றி

46. ஓம் சுப்பிரமணியனே போற்றி

47. ஓம் சரபூபதியே போற்றி

48. ஓம் சுந்தரனே போற்றி

49. ஓம் சுகுமாரனே போற்றி

50. ஓம் சுவாமிநாதனே போற்றி

51. ஓம் சுகம் தருபவனே போற்றி

52. ஓம் சூழ் ஒளியே போற்றி

53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி

54. ஓம் செல்வனே போற்றி

55. ஓம் செந்தூர் காவலனே போற்றி

56. ஓம் சேவல் கொடியோனே போற்றி

57. ஓம் சேவகனே போற்றி

58. ஓம் சேனாபதியே போற்றி

59. ஓம் சேனைத்தலைவனே போற்றி

60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

61. ஓம் சோலையப்பனே போற்றி

62. ஓம் ஞானியே போற்றி

63. ஓம் ஞாயிறே போற்றி

64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

65. ஓம் ஞான உபதேசியே போற்றி

66. ஓம் தணிகாசலனே போற்றி

67. ஓம் தயாபரனே போற்றி

68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி

69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

70. ஓம் திருவே போற்றி

71. ஓம் திங்களே போற்றி

72. ஓம் திருவருளே போற்றி

73. ஓம் திருமலை நாதனே போற்றி

74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி

75. ஓம் துணைவா போற்றி

76. ஓம் துரந்தரா போற்றி

77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி

78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

79. ஓம் தேவாதி தேவனே போற்றி

80. ஓம் தேவை அருள்வாய் போற்றி

81. ஓம் தேரேறி வருவோய் போற்றி

82. ஓம் தேசத் தெய்வமே போற்றி

83. ஓம் நாதனே போற்றி

84. ஓம் நிலமனே போற்றி

85. ஓம் நீறணிந்தவனே போற்றி

86. ஓம் பரபிரம்மமே போற்றி

87. ஓம் பழனியாண்டவனே போற்றி

88. ஓம் பாலகுமரனே போற்றி

89. ஓம் பன்னிரு கையனே போற்றி

90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

91. ஓம் பிரணவமே போற்றி

92. ஓம் போகர் நாதனே போற்றி

93. ஓம் போற்றப்படுவோனே போற்றி

94. ஓம் மறைநாயகனே போற்றி

95. ஓம் மயில் வாகனனே போற்றி

96. ஓம் மகா சேனனே போற்றி

97. ஓம் மருத மலையானே போற்றி

98. ஓம் மால் மருகனே போற்றி

99. ஓம் மாவித்தையே போற்றி

100. ஓம் முருகனே போற்றி

101. ஓம் யோக சித்தியே போற்றி

102. ஓம் வயலூரானே போற்றி

103. ஓம் வள்ளி நாயகனே போற்றி

104. ஓம் விராலிமலையானே போற்றி

105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி

106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி

107. வேலவனே போற்றி

108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

(108 murugan potri tamil version 01) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, 108 போற்றிகள். You can also save this post 108 murugan potri – 108 முருகன் போற்றி (வ‌ 01) or bookmark it. Share it with your friends…

Leave a Comment