இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீருத்ரம் நமகம் சமகம் ஸ்லோகங்கள் முழுவதும்) – Sri Rudram Namakam and Chamakam Slokas – Mantras With Meaning பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீருத்ரம் நமகம் சமகம் ஸ்லோகங்கள் முழுவதும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – முதல் அனுவாகம்

அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்

ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜேபிராகதம்

இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்

வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே,
ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே, சித்தஞ்ச ம ஆதிதஞ்ச மே, வாக்ச மே,
மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே, பலஞ்ச ம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே,
ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே,
வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே,
பரூ ஷி ச மே, ஸரீராணி ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – இரண்டாவது அனுவாகம்

செல்வச் செழிப்பு வேண்டுதல்

ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே,
ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே,
ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே,
வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே,
வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே,
மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே,
ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே,
ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச ம ருத்தஞ்ச ம ருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – மூன்றாவது அனுவாகம்

இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,
பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே,
÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,
ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே,
ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – நான்காவது அனுவாகம்

உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்

ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே,
ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே,
புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே,
பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே,
பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே,
யவாஸ்ச மே, மாஷாஸ்ச மே, திலாஸ்ச மே,
முத்காஸ்ச மே, கல்வாஸ்ச மே, கோதூமாஸ்ச மே,
மஸுராஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே,
ஸ்யாமாகாஸ்ச மே, நீவாராஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – ஐந்தாவது அனுவாகம்

பூமி, பயிராகும் பொருள்கள், தாதுப்பொருள்கள், குடியிருப்பு, காடு, மூலிகைகள், பரம்பரைச் செல்வம் ஆகியவற்றை வேண்டுதல்

அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே,
ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே,
க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே,
பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே,
கர்ம ச மே, ஸக்திஸ்ச மே,
ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – ஆறாவது அனுவாகம்

புற வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே,
ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே,
பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே,
த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே,
மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே,
தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே,
ந்தரிக்ஷஞ்ச ம ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம ம இந்தரஸ்ச மே,
திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – ஏழாவது அனுவாகம்

இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாப்யஸ்ச மே,
திபதிஸ்ச ம உபாஸுஸ்ச மே,
ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,
ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே,
திக்ராஹ்யாஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே,
மருத்வதீயாஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே,
பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – எட்டாவது அனுவாகம்

யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்

இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே,
க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே,
திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே,
பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே,
க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாஸ்ச மே,
பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகாகாரஸ்ச மே

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – ஒன்பதாவது அனுவாகம்

யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்

அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே,
ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே,
யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே,
ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷõ ச மே,
தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே ச மே,
யஜ்ஞேன கல்பேதாம்

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – பத்தாவது அனுவாகம்

யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்

கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே,
பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே,
பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே,
வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம்,
வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம்,
வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்

============

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் – சமகம் – பதினொன்றாவது அனுவாகம்

பல்வகைத் தத்துவங்களின் ஞானமும் பரம்பொருளின் அருள் விளக்கமும் ஸித்திக்க வேண்டுதல்

ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச மே, ஸப்த ச மே,
நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,
ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவி ஸதிஸ்ச மே,
த்ரயோவி ஸதிஸ்ச மே, பஞ்சவி ஸதிஸ்ச மே,
ஸப்தவி ஸதிஸ்ச மே, நவவி ஸதிஸ்ச ம ஏகத்ரி ஸச்ச மே,
த்ரயஸ்த்ரி ஸச்ச ம சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே,
த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, வி ஸதிஸ்ச மே,
சதுர்வி ஸதிஸ்ச மே, ஷ்டாவிஸதிஸ்ச மே, த்வாத்ரிஸச்ச மே,
ஷட்த்ரி ஸச்ச மே, சத்வாரி ஸச்ச மே,
சதுஸ்சத்வாரி ஸச்ச மே, ஷ்டாசத்வாரி ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச

சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல, கூற்றிலும் செயலிலும் இனிமையே நிறைய, நலம் தந்தருளுமாறு வேண்டி நிற்றல்

இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹி ஸீர்-
மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி
மது மதீம் தேவேப்யோ வாசமுத்யாஸ ஸுஸ்ரூஷேண்யாம்
மனுஷ்யேப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்ப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்ர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.

ஸ்ரீ ருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார்.

============

ஸ்ரீ ருத்ரம் சிறப்பு | Sri Rudram Special facts

#ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், #சமகம் என இரண்டு பகுதிகளை உடையது.

இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது.

இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும்.

மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும்.

பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர்.

சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும்.

சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.

ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.

ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.

ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர்.

11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

============

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்ப்படும் பலன்கள் :

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவர்கள் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றனர். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் தடைபெற்ற காரியங்கள் நிவர்த்தி பெறவும், சுப நிகழ்ச்சிகள், உத்தியோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மனைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம்.

ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூதசம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ர ஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.

பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.

============

ருத்ர பூஜையின் உண்மையான அர்த்தமும் அதன் மஹத்துவமும்.

ருத்ர ஜெபம் என்பது ஆகாசத்திலிருந்து (அண்டவெளி) பதிவிறக்கம் செய்யப்பட்ட பழமையான ஒரு மந்திர உச்சாடனம்.

பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தியானத்தில் அமர்ந்த போது அவர்கள் காதில் கேட்டவற்றை எல்லாம் மற்றவர்களுக்கு மாற்றி அளித்தனர். ருத்ர ஜெபத்தின் விளைவு என்னவென்றால் அது நேர்மறை சக்தியை உருவாக்கி,எதிர்மறை அதிர்வுகளை நீக்கிவிடும். ருத்ர ஜெபத்தை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கின்றது. அது நடக்கும்பொழுது இயற்கை வளம் பெறுகின்றது. இயற்கை ஆனந்த மயமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகின்றது.

இதில் முக்கியமானது அதிர்வுகளே. உச்சரிக்கப்படும் எல்லா மந்திரங்களுக்கும் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா என்று என்னைக் கேட்டால் எனக்கும் தெரியாது. மந்திரங்கள் ஓதும்போது அவற்றின் பொருளை விட அவற்றால் உண்டாகும் அதிர்வுகளே முக்கியம்.

அதில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகம் ‘நமோ, நமோ. நமோ, நமோ’ என்று சொல்கின்றது.’மன’ என்றால் மனம். ஆங்கில வார்த்தை ‘mind’ என்பது சம்ஸ்கிருத வார்த்தையான ‘மன’ என்பதிலிருந்துதான் வந்திருக்கின்றது. மன என்பதனை திருப்பிப் படித்தால் நம என்று வருகின்றது தனது ஆதாரமான மூலத்தை நோக்கித் திரும்பிச் செல்லும் மனம் ‘நம’ எனப்படுகின்றது. வெளியில் உலக அனுபவங்களை நோக்கிச் செல்லும்போது ‘ மன’ என்று சொல்லப்படுவதே திரும்பி உள்ளே ஆதாரத்தை நோக்கிச் செல்லும்போது ‘nama’ எனப்படுகின்றது. மனம் தனது ஆரம்ப மூலத்தை அடைந்ததும் அனைத்துமே ஒன்றால் ஆக்கப்பட்டவை என்பதை அறிந்து கொள்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள்? அனைத்துமே இறைத்துகள்கள் என்னும் ஒன்றால் ஆக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதையே ரிஷிகளும் சொல்லி இருக்கின்றார்கள். ஆணுமல்லாத பெண்ணுமல்லாத அதனை அவர்கள் ப்ரம்மம் என்றழைத்தார்கள். அது ஒரு தத்துவம். அனைத்துமே அந்தப் ப்ரம்மத் தத்துவத்தாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. அதுவே ஒவ்வொன்றினுள்ளும் இருக்கும் சிவ தத்துவம் எனப்படுகின்றது.

ஆகவே தான் ‘நமோ, நமோ’ என்று சொல்லப்படுகின்றது. மரங்கள், பசுமையான செடிகொடிகள், பறவைகள், கள்வர்கள் , கொள்ளைக்காரர்கள் என்று அனைத்திலும் எங்கும் நிறைந்திருப்பது அந்த ஒரே தத்துவம் தான்.

அடுத்து இரண்டாவது பாகம் ‘சமே, சமே, சமே, சமே’ என்று சொல்கின்றது. இதை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள் இல்லையா? அனைத்தும் என்னுள் இருக்கின்றது என்று இதற்குப் பொருள். ஆங்கில வார்த்தை ‘me’ என்பதும் ‘ம’ என்னும் சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தான் வந்துள்ளது. இரண்டாவது பாகம் அனைத்துமே எனக்காக என்னால் ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றது. எண்கள் ‘ ஏகாச்சமே’ அதாவது ஒன்று, இரண்டு, மூன்று,, நான்கு என்னும் அனைத்தும் என் வடிவமே. அதே போல் ‘சுகம்சமே’ என் மகிழ்ச்சி, ‘அபயஞ்சமே’ அஞ்சாமை, ஆனந்தம், ஆரோக்கியம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் என்னைச் சேர்ந்தவையே.

இவ்வாறு மந்திரம் ஓதும் போது பொதுவாக பால் , தயிர் , இளநீர் போன்ற அபிஷேக திரவியங்கள் சிவலிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக வழிய விடப்படுகின்றது. இது ஒரு பழங்கால முறை. இது நீர் அல்லது நெருப்புடன் செய்யப்படுகின்றது. நெருப்பு மூட்டப்பட்டு பல விதமான ஆகுதி பொருட்கள் , காயகல்ப மூலிகைகள் வெவ்வேறு மந்திரங்களுக்கேற்ப அதில் இடப்படுகின்றன. அல்லது மந்திர உச்சரிப்பை கவனிக்கும் நேரத்தில் தண்ணீர் ஒரு நூலிழை போல லிங்கத்தின் மேல் வழிய விடப்படுகின்றது.

(sri rudram namakam chamakam slokas mantras) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Veda Mantras in Tamil, Mantras, வேத மந்திரங்கள். You can also save this post ஸ்ரீருத்ரம் நமகம் சமகம் ஸ்லோகங்கள் முழுவதும் or bookmark it. Share it with your friends…

Leave a Comment