Theekkoluthi Song Lyrics is from the movie Bison ( Kaalamaadan )  which was released in the year 2025 and it was sung by the singer Nivas K Prasanna. The lyrics of this song Theekkoluthi was written by Mari Selvaraj and music composed by Nivas K Prasanna. Dhruv have performed in this song.

=================

Actor : Dhruv
Movie : Bison Kaalamaadan
Music : Nivas K Prasanna
Singer : Nivas K Prasanna
Lyricist : Mari Selvaraj
Year : 2025
=================

ஆண் : தீ மூட்டி தீ மூட்டி
நெஞ்சாங்கூட்ட பத்த வச்ச
காட்டுப்பேச்சி நீ காட்டுப்பேச்சி நீ

ஆண் : தாலாட்டி தாலாட்டி
பச்சபுள்ள ஏங்க வச்ச
பாட்டுப்பேச்சி நீ பாட்டுப்பபேச்சி நீ

ஹம்மிங் : …………….

ஆண் : ராசத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி

ஹம்மிங் : …………….

ஆண் : அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி

ஹம்மிங் : ………………

ஆண் : போற நீ வாக்கப்பட்டு
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி  நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி

ஆண் : அடியே போடி…
நீ போடி
உன்ன தேடி என்ன தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீக்கொழுத்தி…..ஈ….
ஏ….ஏ….ஏ….

ஆண் : அடியே மச்சி வீட்டு மயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆசை துடிக்குதடி

ஆண் : அடியே மச்சி வீட்டு மயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி

ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை  வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை வெடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

ஆண் : அடியே பொட்டுவச்ச என் ரத்தினமே
வரைஞ்சு வச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகயில
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே
தீ பிடிச்சு நான் சாவுறன்னே

ஆண் : நீ மலையேறி போற
நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போற
நான் கடலோடு போறேன்

ஆண் : நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒலியோடு ஒலியாக
வலியோடு வலியாக
எங்கேய்யோ போற
எங்கேய்யோ போறா
எங்கேய்யோ  போறா

ஆண் : ராசத்தி உன் நினைப்பு
கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடி ஆத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சுடி

ஆண் : போற நீ வாக்கப்பட்டு
ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி  நீதான்டி
மனசெல்லாம் உன் நிறம்தான்டி

ஆண் : அடியே போடி…
நீ போடி
உன்ன தேடி என்ன தேடி
என் உசுரும் ஓடுது
உடம்போ வேகுது
மஞ்சனத்தி அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொழுத்தி தீக்கொழுத்தி
தீக்கொழுத்தி தீ தீ தீக்கொழுத்தி
தீ தீ தீக்கொழுத்தி

ஆண் : அடியே ஒத்த சொல்லு ஒயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எரியுதடி
அதுல என் ஆசை துடிக்குதடி

ஆண் : அடியே ஒத்த சொல்லு ஒயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓசை
என் கூட்ட உடைக்குதடி
அதுல உன் வாசம் நுழைக்குதடி

ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆசை துடிக்குதடி
உன் பாசம் எரியுதடி

ஆண் : உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட ஒடைக்குதடி
உன் பாசம் யறியுதடி
என் ஆசை துடிக்குதடி…யே நீயே….

Leave a Comment