Mazhai Nindra Pinbum Song Lyrics is from the movie Raman Thediya Seethai which was released in the year 2008 and it was sung by the singers year : 2008. The lyrics of this song Mazhai Nindra Pinbum Song Lyrics was written by Kabilan and music composed by Vidyasagar. Cheran, Pasupathy, Nitin Satya, Vimala, Ramya have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Cheran, Pasupathy, Nitin Satya, Vimala, Ramya
திரைப்படம் : Raman Thediya Seethai
இசையமைப்பாளர் : Vidyasagar
பாடலாசிரியர் : year : 2008
எழுத்தாளர் : Kabilan
வருடம் : 2008
=================
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கு
உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
பாதம் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
கண் இமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
Mazhai Nindra Pinbum Video Song
The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…
The song “Oru Pere Varalaaru Song” from the 2025 film “Jana Nayagan” features vocals by…
The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…
The song “Chella Magale Song ” from the 2025 film “Jana Nayagan” features vocals by Thalapathy Vijay.…
The song "Thalapathy Kacheri" from the 2025 film "Jana Nayagan" features vocals by Thalapathy Vijay,…
The song "Thalapathy Kacheri" from the 2025 film "Jana Nayagan" features vocals by Thalapathy Vijay,…