இந்த ஆன்மீக பதிவில் (Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே) – Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
என்ன வரம் கேட்பேன் நானே மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே, -கே. ஜே. யேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane (Ayyappan Song) from Sarana Tharangini – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics
சாமியே சரணம் ஐயப்பா!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
என்ன வரம் கேட்பேன் நானே?
என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா,
பொருளை நான் வேண்டவா……,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்
சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்
கடலுக்குள் நான் பிறந்தால்
முத்துக்கள் சேர்க்கணும்…..
முத்துக்கள் கோர்த்து
வந்து ஐயனுக்கு சூட்டணும்,
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
ஆ……..
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
இசை என்னும் மந்திரக்கோலால்
மதங்களை நான் சேர்க்கணும்.
மதங்கள் எனும் மலைகள்,
ஜாதி எனும் தடைகள் கடந்திட
ஐயன் உன் அருளினை நான் பெறணும்.
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்
திருவாபரணப்பெட்டி மேலே
காவலுக்குப் போகணும்
மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்
ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
ஆ…..
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றணும்:
மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்
தொடர்ந்திட ஐய்யன் இரு திருவடி சரணம்!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே
சாமியே சரணம் ஐயப்பா!
(enna varam ketpen naane) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், Ayyappan Tamil Song Lyrics. You can also save this post Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே or bookmark it. Share it with your friends…
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…