இந்த ஆன்மீக பதிவில் (நடராஜப் பத்து) – Natarajar Pathu manthiram and video song பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நடராஜப் பத்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Nataraja Pathu song lyrics

1. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ

போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ

யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே

என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே!

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே !

2. மானாட மழுவாட மதியாட புனலாட

மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட

குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட

குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி

அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட

நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

3. கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

4. பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்

தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச

மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல

ஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல

அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி

கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்

கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க

ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

5. நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்

நின்செவியில் மந்தமுண்டோ!

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்

நோக்காத தந்தையுண்டோ!

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்

தளராத நெஞ்சமுண்டோ!

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ

தந்தை நீ மலடுதானோ!

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே

வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே

வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு

இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

6. வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்

வாஞ்சையில்லாத போதிலும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்

வஞ்சமே செய்தபோதிலும்

மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்

மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும்

முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ

பார்த்தவர்கள் சொல்லுவார்கள்

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ

பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ

என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

7. அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ

அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ

ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ

என் மூட உறவுக்கழுவனோ

முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ

முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ

தவமென்ன எனுறழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ

தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ

எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

8. காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ

கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ

கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ

தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ

தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ

வாணவரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ

வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ

எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

9. தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றை கண்டு தடுக்க

உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

10. இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ

இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ

இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ

இதுவோ உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ

ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்

உனையடுத்துங் கெடுவனோ

ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை

உற்றுபார் மாபெற்ற ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்

இனியருள் அளிக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

11. சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,

குரு, சந்திரன் சூர்யன் இவரை,

சற்று எனகுள்ளக்கி, ராசி பனிரண்டையும்,

சமமாய் நிறுத்தியுடனே,

பணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும்

பக்குவ படுத்தி பின்னால்,

பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்

வெட்டி பலரையும் அதட்டி என் முன்,

கனி போலவே பேசி கேடு நினைவு

நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி,

கத நின் தொண்டராம் தொண்டர்க்கு

தொண்டர்கள் தொழுத நாகி,

இனியவள மருவு சிறு வனவை முனி

சாமி எனை ஆள்வதினி யுன் கடன் காண்.

(nataraja pathu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song. You can also save this post நடராஜப் பத்து or bookmark it. Share it with your friends…

Leave a Comment