இந்த ஆன்மீக பதிவில் (மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Mahalakshmi Ashtakam lyrics) – தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக தீரும். பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Mahalakshmi Ashtakam lyrics ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மஹாலட்சுமி அஷ்டகம் செல்வம் பெருக சொல்ல வேண்டிய மஹாலட்சுமி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |

சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |

சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |

மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |

பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |

ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |

ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |

த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||

|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||

============

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்திர விளக்கம்

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1

வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே!

ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!

தேவர்களால் வழிபடப்படுபவளே!

சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் தாயே!

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |

சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2

எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!

கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!

மஹாலக்ஷ்மித்தாயே!

உன்னை வணங்குகின்றேன் அம்மா!

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |

சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!

அனைத்து வரங்களையும் அளிப்பவளே!

எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!

எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே!

மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!

மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அம்மையே!

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி |

யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5

முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே!

யோக நிலையில் தோன்றியவளே!

யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் மாதாவே!

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |

மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!

எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே!

அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!

பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அம்மா!

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |

பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7

பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!

மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் தாயே!

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |

ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!

பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!

பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே!

உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |

ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |

த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும்.

தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||

தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

============

மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்திர‌ பலன்கள் | Mahalakshmi Ashtaka Stotra Benefits

வீட்டில் செல்வம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். அஷ்டகம் என்றால் எட்டு பொருள்களை கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது. தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மஹாலட்சுமி அஷ்டகத்தை சொல்லி வந்தால் பணப்பிரச்சனைகள் படிப்படியாக தீரும் என்பது நம்பிக்கை.

(mahalakshmi ashtaka stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், Ashtakam. You can also save this post மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Mahalakshmi Ashtakam lyrics or bookmark it. Share it with your friends…

Leave a Comment