இந்த ஆன்மீக பதிவில் (சொற்றுணை வேதியன் சோதி வானவன்) – Namachivaya Thirupathigam Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சொற்றுணை வேதியன் சோதி வானவன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

நமச்சிவாயத் திருப்பதிகம் – சொற்றுணை வேதியன் சோதிவானவன் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் – SOTRUNAI VEDHIYAN – Namachivaya Thirupathigam Lyrics Tamil

============

நமச்சிவாயத் திருப்பதிகம்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்

அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்

அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி

நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்

நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்

குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்

நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்

ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்

தன்னெறி யேசர ணாதல் திண்ணமே

அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்

நன்னெறியாவது நமச்சி வாயவே

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து

ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

திருச்சிற்றம்பலம்

(sotrunai vedhiyan sothivanavan tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை. You can also save this post சொற்றுணை வேதியன் சோதி வானவன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment