Oththa roovayum thaaren Song Lyrics is from the movie nattupura pattu which was released in the year 1996 and it was sung by the singer Arun Mozhi and Devi. Music composed by ilaiyaraaja.

=================
திரைப்படம் : Nattupura pattu
இசையமைப்பாளர் : ilaiyaraaja
பாடலாசிரியர் : Arun Mozhi and Devi
வருடம் : 1996
=================

ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்

பெண் : ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்

ஆண் : ஏய் பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்

பெண் : ஏய் பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா

ஆண் : நா மச்சு வீடும் தாரேன்
பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம் வாடி
மாந்தோப்புக்கு போவோம்

பெண் : அட மச்சு வீடும் வேணாம்
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
மல்லுக்கு நிக்கிற மாமா
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்

ஆண் : ஹே நஞ்சை புஞ்சசையும் தாரேன்
நாலு தோட்டம் எழுதி தாரேன்
தண்ணிக்கு போறது போல
கண்ணே கொளத்து பக்கம் வாடி

பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்
நாலு தோட்டம் தொறவும் வேணாம்
கணக்கு பண்ணுற மாமா உன்
கண்ணுக்கு சிக்க மாட்டேன்

ஆண் : ஏய் சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி

பெண் : ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்

English Lyrics

Oththa roovayum thaaren lyrics

Leave a Comment