Manapennin Sathiyam Song Lyrics In Tamil
Manapennin Sathiyam Song Lyrics song is from the movie Kochadaiiyaan which was released in the year 2014 and it was sung by the singers Latha Rajnikanth. The lyrics of this song Manapennin Sathiyam Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Rajnikanth, Deepika Padukone have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Rajnikanth, Deepika Padukone
திரைப்படம் : Kochadaiiyaan
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Latha Rajnikanth
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 2014
=================
காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
வாழை மரம் போல என்னை
வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணால்
பார்த்திட செய்வேன்
மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மழை காற்றாய் தலை கோதி
நித்திரை தருவேன்
காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றிக்கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்
கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும்
அய்யம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது
உந்தன் தாய்போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்
காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
Manapennin Sathiyam Video Song
Manapennin Sathiyam Song Lyrics from Kochadaiiyaan | Manapennin Sathiyam பாடல் வரிகள் in tamil