இந்த ஆன்மீக பதிவில் (கேது 108 போற்றி | Ketu108 potri) – Ketu 108 potri in tamil | 108 Ketu Potri Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கேது 108 போற்றி | Ketu108 potri ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
1. ஓம் அரவத்தலையனே போற்றி
2. ஓம் அமர உடலோனே போற்றி
3. ஓம் அசுர குலனே போற்றி
4. ஓம் அமரன் ஆனவனே போற்றி
5. ஓம் அசுர நாயகனே போற்றி
6. ஓம் அமுது நாடியவனே போற்றி
7. ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
8. ஓம் அசுப கிரகமே போற்றி
9. ஓம் அரவத் தலைவனே போற்றி
10. ஓம் அர்த்த சரீரனே போற்றி
.
11. ஓம் அபயகரனே போற்றி
12. ஓம் அசுவதி அதிபதியே போற்றி
13. ஓம் அந்தர்வேதி நாடனே போற்றி
14. ஓம் அன்பர்க் காவலனே போற்றி
15. ஓம் அறுபரித் தேரனே போற்றி
16. ஓம் ஆற்றல் மிக்கோனே போற்றி
17. ஓம் இரு கூறானவனே போற்றி
18. ஓம் இடமாய் வருபவனே போற்றி
19. ஓம் ஐயனே போற்றி
20. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
.
21. ஓம் எண் பிள்ளையுடையவனே போற்றி
22. ஓம் ஏழ்மையகற்றுபவனே போற்றி
23. ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
24. ஓம் ஒன்பதாம் கிரகமே போற்றி
25. ஓம் கடையனே போற்றி
26. ஓம் கடைசி கிரகமே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கழுகு வாகனனே போற்றி
29. ஓம் கார் வண்ணனே போற்றி
30. ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
.
31. ஓம் காலனானவனே போற்றி
32. ஓம் கிரகண காரணனே போற்றி
33. ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
34. ஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றி
35. ஓம் கொடி ஆசனனே போற்றி
36. ஓம் கொள் விரும்பியே போற்றி
37. ஓம் கோபியே போற்றி
38. ஓம் கோள் ஆனவனே போற்றி
39. ஓம் சனித் தோழனே போற்றி
40. ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
.
41. ஓம் சாயா கிரகமே போற்றி
42. ஓம் சிம்ஹிகை சேயே போற்றி
43. ஓம் சிரமிழந்தவனே போற்றி
44. ஓம் சிங்கவாகனனே போற்றி
45. ஓம் சித்ரகுப்தனதி தேவதையனே போற்றி
46. ஓம் செதில் முகனே போற்றி
47. ஓம் செங்கண்ணனே போற்றி
48. ஓம் செவ்வண கிரகமே போற்றி
49. ஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றி
50. ஓம் சுக்ரன் தோழனே போற்றி
.
51. ஓம் சூரியப் பகையே போற்றி
52. ஓம் ஞானகாரகனே போற்றி
53. ஓம் ஞானியர்க் கணியே போற்றி
54. ஓம் தவசீலனே போற்றி
55. ஓம் தத்துவஞானியே போற்றி
56. ஓம் தனி கிருஹமிலானே போற்றி
57. ஓம் துருக்கல் உலோகனே போற்றி
58. ஓம் துறவாசையளிப்பவனே போற்றி
59. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
60. ஓம் தோஷ நிவாகரனே போற்றி
.
61. ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
62. ஓம் நற்றேரனே போற்றி
63. ஓம் நெடியவனே போற்றி
64. ஓம் நிறைதனமளிப்பவனே போற்றி
65. ஓம் பயங்கரனே போற்றி
66. ஓம் பயநாசகனே போற்றி
67. ஓம் பல்வண்ண ஆடையனே போற்றி
68. ஓம் பன்னிறக் கொடியனே போற்றி
69. ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
70. ஓம் பற்றறச் செய்பவனே போற்றி
.
71. ஓம் பல்வணக் குடையனே போற்றி
72. ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
73. ஓம் பிரமன் அதிதேவதையனே போற்றி
74. ஓம் பீடையளிப்பவனே போற்றி
75. ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
76. ஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றி
77. ஓம் பெரியவனே போற்றி
78. ஓம் பெருமையனே போற்றி
79. ஓம் மதிக்கெதிரியே போற்றி
80. ஓம் மகத்துக் கதிபதியே போற்றி
.
81. ஓம் மலையத்து விழுந்தவனே போற்றி
82. ஓம் மஹாகேதுவே போற்றி
83. ஓம் மானுடல் பீடனே போற்றி
84. ஓம் மாலருள் பெற்றவனே போற்றி
85. ஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றி
86. ஓம் மோகினி தடிந்தவனே போற்றி
87. ஓம் முருகன் சேவகனே போற்றி
88. ஓம் முக்தியருள்பவனே போற்றி
89. ஓம் முடியணியனே போற்றி
90. ஓம் முக்கோணக்கோலனே போற்றி
.
91. ஓம் மும்மல நாசகனே போற்றி
92. ஓம் மூலத்ததிபதியே போற்றி
93. ஓம் மெய்ஞானியே போற்றி
94. ஓம் மெய்நாட்டமளிப்பவனே போற்றி
95. ஓம் ராகு சமீபனே போற்றி
96. ஓம் ராகுவின் பாதியே போற்றி
97. ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
98. ஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றி
99. ஓம் வந்தனைக்குரியவனே போற்றி
100. ஓம் வாயு திசையனே போற்றி
.
101. ஓம் விஷ்ணு பக்தனே போற்றி
102. ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
103. ஓம் வித்தகனே போற்றி
104. ஓம் வினோதனே போற்றி
105. ஓம் வியாதி தீர்ப்பவனே போற்றி
106. ஓம் வைடூர்யப் பிரியனே போற்றி
107. ஓம் தும் பீஜ மந்திரனே போற்றி
108. ஓம் கேது பகவானே போற்றி
கேது பகவானுக்குரிய காயத்ரி மந்திரம்
அஸ்வத் வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ: கேது ப்ரசோதயாத்
============
கேது பகவான் குறித்த தகவல்கள்
பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான்.கேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
============
கேது காயத்ரி
அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்
உகந்த கிழமை – சனிக்கிழமை
உகந்த நட்சத்திரம் – அசுவதி, மகம், மூலம்
நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி
பிடித்த மலர் – செவ்வரளி
விரும்பும் சமித்து – தர்ப்பை
விரும்பும் தானியம் – கொள்ளு
உரிய ரத்னம் – வைடூர்யம்
அதிதேவதை – விநாயகர், சரஸ்வதி, பிரம்மா
உச்ச வீடு – விருச்சிகம்
நீச்ச வீடு – ரிஷபம்
காரக அம்சம் – ஞானகாரகன்
பிடித்த உலோகம் – துருக்கல்
விரும்பும் வாகனம் – சிம்மம்
மனைவியின் பெயர் – சித்திரலேகா
பிடித்த சுவை – புளிப்பு
காலம் – எமகண்டம்
இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார், 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.
(ketu 108 potri tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், 108 போற்றிகள், நவக்கிரகங்கள். You can also save this post கேது 108 போற்றி | Ketu108 potri or bookmark it. Share it with your friends…