இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி) – Angalamman 108 Potri | Sri Angala Parameshwari 108 Potri பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓம் அங்காள அம்மையே போற்றி

ஓம் அருளின் உருவே போற்றி

ஓம் அம்பிகை தாயே போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அனாத ரட்சகியே போற்றி

ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி

ஓம் அன்னப் பூரணியே போற்றி

ஓம் அமுத சுவையே போற்றி

ஓம் அருவுரு ஆனவளே போற்றி

ஓம் ஆதி சக்தியே போற்றி

ஓம் ஆதி பரம்பொருளே போற்றி

ஓம் ஆதி பராசக்தியே போற்றி

ஓம் ஆனந்த வள்ளியே போற்றி

ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி

ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி

ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

ஓம் ஆதியின் முதலே போற்றி

ஓம் ஆக்கும் சக்தியே போற்றி

ஓம் இன்னல் களைவாளே போற்றி

ஓம் இடர் நீக்குவாளே போற்றி

ஓம் இமயத்து அரசியே போற்றி

ஓம் இச்சா சக்தியே போற்றி

ஓம் இணையில்லா தெய்வமே போற்றி

ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி

ஓம் இயக்க முதல்வியே போற்றி

ஓம் இறைவனின் இறைவியே போற்றி

ஓம் இகம்பர சுகமே போற்றி

ஓம் ஈசனின் துணையே போற்றி

ஓம் ஈஸ்வரி தாயே போற்றி

ஓம் ஈகைப் பயனே போற்றி

ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி

ஓம் ஈசனின் பாதியே போற்றி

ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி

ஓம் ஈசனின் இயக்கமே போற்றி

ஓம் ஈசனின் ஆனவளே போற்றி

ஓம் ஈகை குணவதியே போற்றி

ஓம் உண்மை பொருளே போற்றி

ஓம் உலகை ஈன்றாய் போற்றி

ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி

ஓம் உருவம் ஆனாய் போற்றி

ஓம் உமை அம்மையே போற்றி

ஓம் உயிரே வாழ்வே போற்றி

ஓம் உயிராய் இருப்பாய் போற்றி

ஓம் உடலாய் அமைந்தாய் போற்றி

ஓம் உமா மஹேஸ்வரியே போற்றி

ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி

ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஓம் ஊரைக் காப்பாய் போற்றி

ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி

ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி

ஓம் ஊடல் நாயகியே போற்றி

ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி

ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி

ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

ஓம் எங்களை காப்பாய் போற்றி

ஓம் என்குண வள்ளி போற்றி

ஓம் எழில்மிகு தேவி போற்றி

ஓம் ஏழிசை பயனே போற்றி

ஓம் ஏகம்பன் துணைவி போற்றி

ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி

ஓம் ஏழையை காப்பாய் போற்றி

ஓம் ஐங்கரன் தாயே போற்றி

ஓம் ஐயனின் பாகமே போற்றி

ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி

ஓம் ஐம்பொறி செயலே போற்றி

ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி

ஓம் ஒருமாரி உரமாரி போற்றி

ஓம் ஒன்பான் சுவையே போற்றி

ஓம் ஒலிஒளி ஆனாய் போற்றி

ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி

ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

ஓம் ஓங்காரி ஆனாய் போற்றி

ஓம் ஓங்காளி அங்காளி போற்றி

ஓம் ஓம்சக்தி தாயே போற்றி

ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி

ஓம் ஓங்கார சக்தியே போற்றி

ஓம் கல்விக் கடலே போற்றி

ஓம் கற்பூர வல்லி போற்றி

ஓம் கந்தன் தாயே போற்றி

ஓம் கனகாம் பிகையே போற்றி

ஓம் கார்மேகன் தங்கையே போற்றி

ஓம் காளி சூலியே போற்றி

ஓம் காக்கும் அங்காளியே போற்றி

ஓம் சங்கரி சாம்பவீ போற்றி

ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி

ஓம் சாந்த வதியே போற்றி

ஓம் சிவாகம சுந்தரி போற்றி

ஓம் சினம் தணிப்பாய் போற்றி

ஓம் சிங்க வாகனியே போற்றி

ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி

ஓம் சுந்தர வல்லி போற்றி

ஓம் சூரசம் மாரி போற்றி

ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி

ஓம் தாட்சாயிணி தேவி போற்றி

ஓம் திரிபுர சுந்தரி போற்றி

ஓம் தீபச் சுடரொளியே போற்றி

ஓம் நடன நாயகி போற்றி

ஓம் நான் மறைப் பொருளே போற்றி

ஓம் நீலாம் பிகையே போற்றி

ஓம் நீதிக்கு அரசி போற்றி

ஓம் பஞ்சாட் சரியே போற்றி

ஓம் பம்பை நாயகியே போற்றி

ஓம் பார்வதா தேவி போற்றி

ஓம் பாம்பின் உருவே போற்றி

ஓம் பார் புகழும் தேவியே போற்றி

ஓம் பிணிக்கு மருந்தே போற்றி

ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபட்டு வந்தால் கணவன் – மனைவி இடையே நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

(sri angala parameshwari 108 potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, அம்பாள் பாடல்கள், Ambal Songs. You can also save this post ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி or bookmark it. Share it with your friends…

Leave a Comment