இந்த ஆன்மீக பதிவில் (துளசி கவசம்) – Thulasi Kavasam in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… துளசி கவசம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அஸ்ய ஷ்ரீ துளஸீகவச ஸ்தோத்ர

மந்த்ரஸ்ய ஷ்ரீ மகாதேவருஷி: அனுஷ்டுப் சந்த:

ஷ்ரீ துளஸி தேவதா_மனஸோபீஷ்ட காமாநி ஸர்வ

வித்யார்த்தம் ஜபே விநியோக: றீ

துளசீ ஸ்ரீ மகாதேவி நம: பங்கஜதாரிணி

சிரோ மே துளசீ பாது பாலம் பாது யஸஸ்வினி

த்ருஷெள மே பத்மநயனா ஸ்ரீசகீ ச்ரவணே மம

க்ராணம் பாது சுகந்தா மே முகம் ச சுமுகீ மம

ஜிஹ்வாமே பாது சுபதா கண்டம் வித்யா மயீ மம

ஸ்கந்தௌ கல்ஹாரிணி பாது ஹ்ருதயம் விஹ்ணுவல்லபா

புண்யதா மே பாது மத்யாம் நாபிம் ஸெளபாக்யதாயினி

கடிம் குண்டலினி பாது ஊரு நாரதவந்திதா

ஜனனீ ஜானுனீ பாது ஜங்கே சகலவந்திதா

நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் சர்வரக்ஷணீ

சங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே

நித்யம் ஹி சந்த்யயோ பாது துளசீ ஸர்வத ஸ்தா

இதீதம் பரமம் குஹ்யம் துளஸ்யா கவசாமிருதம்

மர்த்யாநாம மிருதார்த்தாய பீதாநாம் அபயாயச:

மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்

வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்

த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே

அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்

பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்

ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே

பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி

ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத:

உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:

துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்

ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்

மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்

யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்

ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்

வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக

ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்

அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க

பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே

கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம

ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்

கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத:

யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்

மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா

ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:

மண்டலாத் தாரகம் ஹமதா

பிஷ்யசி ந ஸம்ஸய:

============

துளசி கவசம் பொருள்

இந்த துளசி கவச ஸ்தோத்ர மந்திரத்துக்கான ரிஷி, சாக்ஷாத் மகாதேவன். இது அனுஷ்டுப் சந்தஸ் (ஈரடி) என்ற வகையில் இயற்றப்பட்டது. இதன் தேவதை ஷ்ரீ துளசி மாதா. மனதில் தோன்றும் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றுவதில் பிரசித்தி பெற்றது.

துளசி என்கிற மகாதேவி, பங்கஜதாரிணி (தாமரையை ஏந்தியவள்) எனது தலையைக் காக்கட்டும். புகழ்மிக்கவள், மேன்மையானவள், நெற்றியைக் காக்கட்டும்.

கண்களைத் தாமரைக் கண்ணாள் காக்கட்டும். மகாலக்ஷ்மியின் தோழி, காதுகளைக் காக்கட்டும். சுகந்தா மூக்கைக் காப்பாற்றட்டும். எழில்வதனீ என் முகத்தைக் காப்பாற்றட்டும்.

சுபதையானவள் நாக்கைக் காக்கட்டும். (சுபதை – நல்வாக்கு கொடுப்பவள்).

வித்யாமயி கழுத்தைக் காக்கட்டும். கல்யாணி தோள்களை ரட்சிக்கட்டும்: விஷ்ணு வல்லபை என் இதயத்தைக் காப்பாற்றட்டும்.

புண்யதா மத்திய பாகத்தைக் காக்கட்டும். சௌபாக்கிய தேவி நாபியை (தொப்புளை) ரட்சிக்கட்டும். குண்டலினி இடுப்பைக் காக்கட்டும். நாரதரால் தொழப்பட்ட தேவி, என் தொடையை காத்திடட்டும்.

ஜனனீ முழங்கால்களை ரக்ஷிக்கட்டும். நாராயணி கால்களை ரக்ஷிக்க வேண்டும். ஸர்வரக்ஷகி (அனைத்தையும் காப்பவள் எல்லா அங்கத்தையும் காப்பாற்றட்டும்.

கஷ்டகாலங்களிலும், பயத்திலும், யுத்தத்திலும், இரவு பகல் சந்தியா காலங்களிலும் எப்பொழுதும் துளசிதேவி என்னை ரக்ஷிக்க வேண்டும்.

இத்தகைய பரம ரகசியமானதும் புனிதமானதுமான துளசி கவசம் அமிர்தம் போன்றது. மனிதர்களின் பயத்தைப் போக்குவதற்காகவும்….

முக்தியடைய விரும்புவோர்க்கு மோக்ஷத்தையும், தியானத்தை விரும்பும் மனிதர்களுக்கு தியான யோகத்தையும், வசியம் செய்பவர்களுக்குத் தேவையானதையும், ஞானத்தை (வேதம் என்றால் ஞானம்) விரும்புவோருக்கு வித்தையையும் அளிக்கவும்…

தரித்திரனுக்கு திரவியம் அளிக்கவும், பாபம் செய்தவர்களுக்கு பரிகாரம் மற்றும் பிராயச்சித்தம் கிடைக்கவும், பசிப்பிணியில் உழல்பவனுக்கு அன்னம் குறையாமல் கிடைக்கவும், சொர்க்கத்தை விரும்புபவருக்கு சொர்க்கம் கிடைக்கவும்….

செல்வத்தைக் கோருபவன் செல்வத்தையும், புத்திரன் வேண்டுமென்று ஆசைப்படுவன் புத்திரப் பேறு பெறவும், ராஜ்யத்தை இழந்தவன் ராஜ்யத்தைப் பெறவும்…

விஷ்ணுபக்தர்களாக இருந்து சர்வாந்தர்யாமியாக விளங்கிடும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று தர்மம், அர்த்தம் காமம் என்ற மூன்றையும் சித்தி பெற விரும்பும் இல்லறத்தார்…

இத்தகைய சித்திகளை எவர் உடனே அடைய விரும்புகிறாரோ அவர் சூரியனுக்கெதிரில் நின்று கரங்களைக் கூப்பி இந்தக் கவசத்தை அவசியம் ஜபிக்க வேண்டும். துளசி வனத்தில் ஜபிக்கிறவன் கோரிய பயனை உடனடியாக அடைவான்.

என்னுடைய மனதுக்குப் பிரியமான இந்த ஹரி பக்தி மயமான மந்திரத்தை தினமும் படிப்பவரின் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, என் சந்நதியையும் அவன் அடைகிறான்.

இந்த மந்திரத்தைக் கூறி தர்ப்பையால் சரீரத்தைத் தடவினால் பல முறை கருத்தரிக்காத பெண்ணும், நிச்சயம் கருத்தரித்து நல்ல ஆயுஷ்மானான புத்திரனைப் பெறுவாள்; பெரும் வியாதியஸ்தர்கள் நோயிலிருந்து விடுபடுவர்.

ராஜவஸ்யம் (அரசாங்க ஆதரவு) வேண்டுபவன் அரசமரத்தினடியிலும், நல்ல அழகு வேண்டுபவள் நீர் நிலைகளின் கரையிலும், கல்வி வேண்டுபவன் பலாச மரத்தின் கீழும் இருந்து ஜபம் செய்ய வேண்டிய கவசம் இது.

நல்ல கன்னிகையை மணக்க விரும்புபவன் சண்டியின் கோயிலிலும், பகையை வெல்ல விரும்புபவன் எனது கோயிலிலும், (சிவாலயம்) கோரியவற்றைப் பெற விஷ்ணுவின் கோயிலிலும், மனம் விரும்புபவளை மணக்க விரும்புபவன் உத்தியான வனத்திலும் ஜபம் செய்ய வேண்டும்.

இக்கவசத்தை ஜபம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அதிகம் சொல்வானேன்? எவரெவர் எந்தெந்தப் பலனைக் குறித்து இதைச் சொல்கிறாரோ அவரவர் அந்தந்தப் பலனை அடைகிறார்.

ஆகையால் தாரகாசுரனை வதம் செய்வதற்காக இந்த என்னுடைய ஆலயத்தில் இருக்கிற நீ, துளசி தேவியினிடம் மனத்தை இருத்தி இக்கவசத்தை ஜபம் செய்யக்கடவாய். (சிவபெருமான் கூறியது)

இப்படி தியானம் செய்தால் ஒரு மண்டலத்துக்குள் தாரகாசுரனை ஜெயிப்பாய், இதில் ஐயமில்லை.

அசுரனை வெல்ல ஆறுமுகனுக்கு அரன் சொன்ன இக்கவசத்தைச் சொல்வோர், ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது நிச்சயம். – நிறைவுற்றது.

============

துளசியைப் பயன்படுத்துவது எப்படி?

============

How to use thulasi Plant in our daily life

கோவில்களிலும், நீர்நிலை கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும். துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள். ஏனெனில், அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை பூமாதேவியின் அவதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.

விஷ்ணு சேவைக்கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும். பயபக்தியுடன் சாப்பிட வேண்டும்.

============

கருந்துளசி மகிமை

கருந்துளசி விசேஷ குணமுடையது. இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுடவைத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல் முதலானவை நீங்கும். நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.

============

துளசி அர்ச்சனை ஏன்?

பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார். அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள். துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது. இதைக் குணமாக்க துளசியைச் சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.

(thulasi kavasam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள், Kavasam, கவசம். You can also save this post துளசி கவசம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment