இந்த ஆன்மீக பதிவில் (கற்பூர நாயகியே .! கனகவல்லி) – Karpoora Nayagiye Kanagavalli Amman Devotional Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கற்பூர நாயகியே .! கனகவல்லி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கற்பூர நாயகியே .! கனகவல்லி , காலி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா: L.R. ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Karpoora Nayagiye Kanagavalli Amman Devotional Song Lyrics – from Thaaye Karumari sung by LR Eswari , Tamil Lyrics

============

கற்பூர நாயகியே .! கனகவல்லி ,

காலி மகமாயி கருமாரியம்மா

பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா

பூவிருந்த வல்லி தெய்வானையம்மா

விற்கோல வேதவல்லி விசாலாட்சி

விழிகோல மாமதுரை மீனாட்சி

சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே

சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி

புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி

நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி

நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி

கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி

காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி

உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி

உன்னடிமைச் சிறியோனை நீ ஆதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த

உறவிடத்தில் முறையிடுவேன் தாயே..! எந்தன்

அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற

அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா

கண்ணீரை துடைத்துவிட ஒடிவாம்மா

காத்திருக்க வைத்திருத்தல் சரியோ அம்மா

சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு

சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு (கற்பூர நாயகியே)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்

காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்

பண்ணமைக்கும் நா உன்னையே பாட வேண்டும்

பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும்

எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்

இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்

மண்ணளக்கும் சமயபுரம் மாரியம்மா

மக்களுடைய குறைகளையும் தீருமம்மா (கற்பூர நாயகியே)

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டா

அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டா

கண்ணுக்கு இமையின்று காவலுண்டோ

கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ

முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ

முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ

எண்ணைக்கும் விளக்குக்கும் பேத முண்டோ

என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ (கற்பூர நாயகியே)

அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்

அறிவுக்கே என் காத்து கேட்க வேண்டும்

வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்

வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்

பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்

பரிவுக்கே நானென்றும் வாழ வேண்டும் (கற்பூர நாயகியே)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை

கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை

நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை

நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை

செம்பவள வாயழகி உன் எழிலோ

சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை

அம்பளவு விழியாளே உன்னை என்றும்

அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை (கற்பூர நாயகியே)

காற்றாகி கனலாகி கடலாகினாய்

கருவாகி உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்

நிலமாகி பயிராகி உணவாகினாய்

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்

போற்றாத நாளில்லை தாயே உன்னை

பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை

(கற்பூர நாயகியே)

(karpoora nayagiye kanagavalli) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs. You can also save this post கற்பூர நாயகியே .! கனகவல்லி or bookmark it. Share it with your friends…

Leave a Comment