Categories: Devotional Songs

மீனாட்சி பஞ்சரத்னம் | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் | meenakshi pancharatnam

இந்த ஆன்மீக பதிவில் (மீனாட்சி பஞ்சரத்னம் | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம்) – Meenakshi Pancharatnam | Sri Meenakshi Pancharatnam in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மீனாட்சி பஞ்சரத்னம் | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Meenakshi Pancharatnam Lyrics in Tamil | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் ஸ்லோக‌ வரிகள்

உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூரஹாரோஜ்வலாம்

பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம் பீதாம்பராலங்க்ருதாம் I

விஷ்ணு ப்ரஹ்மஸுநேந்திர ஸேவிதபதாம் தத்வஸ்வரூபாம் சிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம் நிதிம் II 1 II

முக்தாஹார லஸத்கிரீட ருச்ராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்

சிஞ்ஜந்நூபுர கிங்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம் I

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமாஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II 2 II

ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்யவஸதிம் ஸ்ரீமத்ஸபாநாயகீம்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II 3 II

ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்

ச்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம் I

வீணாவேணு ம்ருதங்கவாத்ய ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II 4 II

நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரதாம்

நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரியுகலாம் நாராயணே நார்சிதாம் I

நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம் நாநார்த்தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II 5 II

*** மீனாட்சி பஞ்சரத்னம் முற்றிற்று ***

மீனாட்சி பஞ்சரத்தினம் (மீனாட்சியின் ஐந்து நகைகள்) என்பது மீனாட்சி தேவியின் மீது கார்ய‌ஸித்தி மந்திரமாக ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட ஒரு பிரபலமான ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் சுந்தரேஸ்வரரின் (சிவன்) மனைவி மீனாட்சி தேவியின் தெய்வீக குணங்கள், தோற்றம் மற்றும் மகத்துவத்தை விளக்குகிறது.

============

மீனாட்சி பஞ்சரத்னம் பொருள்

============

Meenakshi Pancharatnam Meaning in Tamil | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் ஸ்லோக‌ பொருள் மற்றும் வரிகள்

உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்

பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்

விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்; வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்; கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும் புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்; பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும் திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும் உண்மைப் பொருளானவளும் மங்கள வடிவானவளும் கருணைக்கடல் ஆனவளும் பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்

சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும், ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும், கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், தாமரை போல் அழகு பொருந்தியவளும், அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும், மலைமகளும், கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்;கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

மறைகல்வி வடிவானவளும், சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும், சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்; உலகங்களை மயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்

ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

சுந்தரேசருடைய நாயகியும், அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையும, கருணைக்கடல் ஆனவளும, பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நானா யோகி முனீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நானார்த்த சித்திப்ரதாம்

நானா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேநார்ச்சிதாம்

நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த்த தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும், வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும், எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும், நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும், நாதபிரம்ம உருவானவளும், உயர்ந்ததிலும் உயர்வானவளும், அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

(meenakshi pancharatnam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், p susheela jaya jaya devi, Meenakshi Amman Songs, மீனாட்சி அம்மன். You can also save this post மீனாட்சி பஞ்சரத்னம் | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

Beer Song Lyrics in Diesel | பீர் பாடல் வரிகள்

பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…

2 months ago

Beer Song Lyrics in Diesel

Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…

2 months ago

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

3 months ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

3 months ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

4 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 months ago