இந்த ஆன்மீக பதிவில் (ராகு 108 போற்றி | Rahu 108 potri) – Rahu 108 potri in tamil | 108 Rahu Potri Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ராகு 108 போற்றி | Rahu 108 potri ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓம் அமிர்தம் அருந்திய அரவே போற்றி

ஓம் அரக்கன் தலை கொண்டாய் போற்றி

ஓம் அரச பதம் அருள்வாய் போற்றி

ஓம் அருகம் புல்லை உவப்பாய் போற்றி

ஓம் அறிதற் கரிய பொருளே போற்றி

ஓம் அன்பரைக் காக்கும் அருளே போற்றி

ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி

ஓம் இடப ராசியில் இனிப்பாய் போற்றி

ஓம் இராகுவே போற்றி

ஓம் இராகு காலம் நின்றாய் போற்றி

ஓம் ஈசன் அடியார்க்கு இனியாய் போற்றி

ஓம் உதவும் உள்ளம் கொண்டாய் போற்றி

ஓம் உளுந்து சோறு உகந்தாய் போற்றி

ஓம் எதிர்பாராச் செல்வம் ஈவாய் போற்றி

ஓம் ஏற்றம் அளித்து மகிழ்வாய் போற்றி

ஓம் கங்கை நீராடல் உகப்பாய் போற்றி

ஓம் கேடயம் உடையாய் போற்றி

ஓம் கதிரோன் வழியை மேவுவாய் போற்றி

ஓம் கடகம் உகந்த கனலே போற்றி

ஓம் கடுகுத் தூபம் களிப்பாய் போற்றி

ஓம் கருமையின் உருவே போற்றி

ஓம் கரிய ஆடை உகந்தாய் போற்றி

ஓம் கரிய பாம்பின் தலையில் போற்றி

ஓம் கருங்கல் தன்னில் களிப்பாய் போற்றி

ஓம் கருணை உடையாய் போற்றி

ஓம் கருநிறக் கொடி உடையாய் போற்றி

ஓம் கலையின் வடிவே போற்றி

ஓம் கவந்த உருவினாய் போற்றி

ஓம் கன்னி ராசியில் களிப்பாய் போற்றி

ஓம் காசிபன் மகனே போற்றி

ஓம் காமதேனுவாய் வழங்குவாய் போற்றி

ஓம் காளத்தி உகந்த கடவுளே போற்றி

ஓம் கேதுவின் துணைவா போற்றி

ஓம் கைப்பு உணவில் களிப்பாய் போற்றி

ஓம் கொற்றவை ஆணை முடிப்பாய் போற்றி

ஓம் கோணத்தில் நின்று கொடுப்பாய் போற்றி

ஓம் கோமேதகம் அணிவாய் போற்றி

ஓம் கோளின் கொடுமை தவிர்ப்பாய் போற்றி

ஓம் சந்திரன் பகையே போற்றி

ஓம் சனியின் நண்பனே போற்றி

ஓம் சனிபோல் பலனைத் தருவாய் போற்றி

ஓம் சனி போல் முதன்மை உறுவோய் போற்றி

ஓம் சிம்மிகைச் செல்வா போற்றி

ஓம் சிவநேசனே போற்றி

ஓம் சூரனே போற்றி

ஓம் சூலப் படையாய் போற்றி

ஓம் செல்வம் அளிப்பாய் போற்றி

ஓம் தன்வசம் ஆக்கும் தன்மையோய் போற்றி

ஓம் தானவா போற்றி

ஓம் திசைஎலாம் ஆள்வாய் போற்றி

ஓம் தீநெறி மாற்றுவாய் போற்றி

ஓம் தீம்பால் ஆட்டு உகந்தாய் போற்றி

ஓம் தீமை தவிர்ப்பாய் போற்றி

ஓம் துன்பம் துடைப்பாய் போற்றி

ஓம் தூயவர்க்கு அருள்வாய் போற்றி

ஓம் தெய்வ நலம் பெற்ற தீரா போற்றி

ஓம் தென்மேற்குத் திசை நோக்கி நின்றாய் போற்றி

ஓம் தேறற் கரியாய் போற்றி

ஓம் தேவனே போற்றி

ஓம் தொன்மை நிழலோய் போற்றி

ஓம் நாக உடல் கொண்டாய் போற்றி

ஓம் நாகேஷ் சுரத்து நம்பா போற்றி

ஓம் நிழலாய் இருந்து நிகழ்த்துவாய் போற்றி

ஓம் நினைத்த தெல்லாம் கொடுப்பாய் போற்றி

ஓம் பகைத்தோரை அழிப்பாய் போற்றி

ஓம் பணிந்தார் பாவம் துடைப்பாய் போற்றி

ஓம் பதினாறு பொருளும் படைப்பாய் போற்றி

ஓம் பதினெண் திங்கள் தங்குவாய் போற்றி

ஓம் பாதி உடம்பின் பகவ போற்றி

ஓம் பாம்பின் தலைவனே போற்றி

ஓம் பார்வையில் நன்மை படைப்போய் போற்றி

ஓம் பித்த நாடியில் பேசுவாய் போற்றி

ஓம் பிள்ளைப்பேறு அளிப்பாய் போற்றி

ஓம் பிறப்பைத் தருபவனே போற்றி

ஓம் பிறர்வயம் ஆகும் பெரியோய் போற்றி

ஓம் பீடுடைக் கோளே போற்றி

ஓம் புளிப்புச் சுவையில் களிப்பாய் போற்றி

ஓம் பெருநலம் அருள்வாய் போற்றி

ஓம் பேருடல் உடையவனே போற்றி

ஓம் பைய நடக்கும் பரம போற்றி

ஓம் போட்டியில் வெற்றி புணர்ப்போய் போற்றி

ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி

ஓம் மகர வீட்டில் மகிழ்வாய் போற்றி

ஓம் மாற்றுப்போக்கு உடையாய் போற்றி

ஓம் முதலில் புகழைத் தருவாய் போற்றி

ஓம் முடிசூடி மகிழ்வாய் போற்றி

ஓம் முடியாத எல்லாம் முடிப்பாய் போற்றி

ஓம் முனை முகத்தினாய் போற்றி

ஓம் முனை முகத்து வெற்றி தருவாய் போற்றி

ஓம் மேடராசியில் பிறந்தாய் போற்றி

ஓம் வணங்கத் தக்கவா போற்றி

ஓம் வரம்பல தருவாய் போற்றி

ஓம் வரம்தரு கையாய் போற்றி

ஓம் வலிய அங்கத்தினாய் போற்றி

ஓம் வலிமை உடையவா போற்றி

ஓம் வானோர் குழுவில் வைகுவாய் போற்றி

ஓம் விடத்தி முகத்தினாய் போற்றி

ஓம் விரிகதிர் விழுங்குவாய் போற்றி

ஓம் வீட்டில் வளமை வழங்குவாய் போற்றி

ஓம் வீரனே போற்றி

ஓம் வீறுடையோனே போற்றி

ஓம் வீரம் விவேகம் உடையாய் போற்றி

ஓம் வெற்றி உடையாய் போற்றி

ஓம் வெற்றி தருவாய் போற்றி

ஓம் வேண்டுவ அருள்வாய் போற்றி

ஓம் வேதம் அறிந்தவா போற்றி

ஓம் வேதநாயகர் அருள் பெற்றாய் போற்றி

ஓம் வேதம் உணர்ந்த தேவே போற்றி போற்றி….

============

ராகு பகவான் குறித்த‌ தகவல்கள்

மனிதத் தலையும் பாம்பு உடம்பும் கொண்டவர் ராகு பகவான். ராகு பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

உகந்த கிழமை – சனிக்கிழமை

உகந்த நட்சத்திரம் – திருவாதிரை, சுவாதி, சதயம்

நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி

பிடித்தமான மலர் – மந்தாரை

விரும்பும் சமித்து – அருகு

உரிய ரத்தினம் – கோமேதகம்

அதிதேவதை -பத்திரகாளி, துர்க்கை

உச்ச வீடு – விருச்சிகம்

நீச்ச வீடு – ரிஷபம்

காரக அம்சம் – யோகம்

விரும்பும் தான்யம் – உளுந்து

பிடித்த உலோகம் – கருங்கல்

விரும்பும் வாகனம் – ஆடு

மனைவியின் பெயர் – கிம்ஹிசை

உரிய திசை – தென்மேற்கு

பிடித்த சுவை – புளிப்பு

காலம் – ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார், 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

============

ராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாகத்வஜாய வித்மஹே

பத்ம அஸ்தாய தீமஹி

தன்னோ ராகு ப்ரசோதயாத்

பொருள்: நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.

============

ராகு போற்றி பாடல்

அரவெனும் ராகு ஐயனே போற்றி

கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி

ராகுக்கனியே ரம்யா போற்றி.

பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.

(rahu 108 potri tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், 108 போற்றிகள், நவக்கிரகங்கள். You can also save this post ராகு 108 போற்றி | Rahu 108 potri or bookmark it. Share it with your friends…

Leave a Comment