இந்த ஆன்மீக பதிவில் (சுதர்சன அஷ்டோத்ரம் | சுதர்சன காயத்ரி மந்திரம்) – Sudarshana Ashtotram | Sudarshana 108 names | 108 names of sudarshana பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சுதர்சன அஷ்டோத்ரம் | சுதர்சன காயத்ரி மந்திரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஓம் சுதர்ஹநாய வித்மஹே!!

மஹாஸ்வாலாய தீமஹி!!

தன்னோ சக்ரஹ்; ப்ரசோதயாத்!

பலன் தரும் இந்த ஸ்ரீ சுதர்சன அஷ்டோத்தரத்தை தினமும் சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்து வந்தால் நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!!

============

108 names of sudharsana | Sudharsanar 108 potri in tamil

ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி

ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி

ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி

ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி

ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி

ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி

ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி

ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி

ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி

ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி!!

ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி

ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி

ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி

ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி

ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி

ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி

ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி

ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி

ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி

ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி!!

ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி

ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி

ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி

ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி

ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி

ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி

ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி

ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி

ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி

ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி!!

ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி

ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி

ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி

ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி

ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி

ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி

ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி

ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி

ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி

ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி!!

ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி

ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி

ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி

ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி

ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி

ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி

ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி

ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி

ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி

ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி!!

ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி

ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி

ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி

ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி

ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி

ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி

ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி

ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி

ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி

ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி!!

ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி

ஓம் முக்கண்களை உடையவரே போற்றி

ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி

ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி

ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி

ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

ஓம் ருத்ரப் பிரியரே போற்றி

ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி

ஓம் மஹா வீரரே போற்றி

ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி!!

ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி

ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி

ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி

ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி

ஓம் சிவப்ரியரே போற்றி

ஓம் மஹா பலரே போற்றி

ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி

ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி

ஓம் மஹா சூரரே போற்றி

ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி!!

ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி

ஓம் தர்மராஜரே போற்றி

ஓம் சமத்துவமுடையவரே போற்றி

ஓம் தண்டதரரே போற்றி

ஓம் தபஸ்வியே போற்றி

ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி

ஓம் சர்வக்ஞரே போற்றி

ஓம் புண்ணிய மித்திரரே போற்றி

ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி

ஓம் மிக பயங்கர வாதியே போற்றி!!

ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி

ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி

ஓம் பாவிகளின் எமனே போற்றி

ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி

ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி

ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி

ஓம் கோரமானவரே போற்றி

ஓம் பயங்கரரே போற்றி

ஓம் திருப்தியுற்றவரே போற்றி

ஓம் ஸம்ஹாரியே போற்றி!!

ஓம் குளிரச் செய்பவரே போற்றி

ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி

ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி

ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே போற்றி போற்றி!!

============

சங்கடங்கள் தீர்க்கும் சுதர்சன அஷ்டகம்

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து

வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர். பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்…!

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற் பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் ஸ்ரீநரசிம்மர் இருப்பார்…!

(sudarshana 108 names sudarshana gayathri mantra) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பால்கள், Gayatri Mantra, காயத்ரி மந்திரம். You can also save this post சுதர்சன அஷ்டோத்ரம் | சுதர்சன காயத்ரி மந்திரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment