இந்த ஆன்மீக பதிவில் (திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா) – Thiruppaarkadalil Palli Kondaye Sriman Narayana பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Thiruppaarkadalil Palli Kondaye |Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா …ஆ….ஆ….ஆ…..

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா – அன்று

உரலுடன் நடந்த கண்ணனும் நீயே

ஸ்ரீமந் நாராயணா

இரணியன் அகந்தை அழித்தவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா – அன்று

இந்திர வில்லை முறித்தவன் நீயே

ஸ்ரீமந் நாராயணா ………ஆ……ஆ……ஆ…….

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே

அறியாயோ நீயே? – அவள்

கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?

ஸ்ரீமந் நாராயணா

தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ

மறந்தாயோ நீயே? – உன்

தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே

வருவாயோ நீயே……ஏ…..ஏ…..ஏ……..

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து

வரவேண்டும் நீயே – கணை

தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை

அழித்திடுவாய் நீயே

அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து

வாராய் திருமாலே உன்

அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து

காப்பாய் பெருமாளே ……………

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா – அன்பு

திருமகள் துணையில் அமைதி கொண்டாயே

ஸ்ரீமந் நாராயணா

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து

இன்று வீறுடன் வாருங்கள்

நாராயணனெனும் தலைவனின் துணையால்

போர்க்களம் வாருங்கள்

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்

வேல் கொண்டு வாருங்கள் – இனி

வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்

தேவர்கள் வாருங்கள்

ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா

வருவாய் திருமாலே………

துணை தருவாய் பெருமாளே…………..!

============

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல்

============

About Thiruppaarkadalil Palli Kondaye Sriman Narayana Song

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் (Thirupparkadalil song) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த‌ ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம் பெற்றதாகும். இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.தேவராஜன் மற்றும் பாடலை பாடியவர் கே.ஜே. ஜேசுதாஸ்.

(thiruppaarkadalil palli kondaye sriman narayana song) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள். You can also save this post திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா or bookmark it. Share it with your friends…

Leave a Comment